(UTV|கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையில் இடம்பெற்ற நாணயக்கொள்கை மீளாய்வு கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாது இருக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்டையில் துணைநில் வைப்பு வசதி வீதம் 6 தசம் 5 வீதமாகவும், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 7 தசம் 5 வீதமாகவும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் பகுப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.