உள்நாடு

ரயில்வே சேவை பணிப்புறக்கணிப்பில்

(UTV|கொழும்பு) – இன்று(05) நண்பகல் 12 மணிக்கு பின்னர் தாம் சேவையில் இருந்து விலகி இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே சாரதிகளுக்கு போதியளவு பாதுகாப்பு இல்லை என்றும் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் கோரி ரயில்வே சாரதிகள் சேவையில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிகப்படுகின்றது.

போதைப்பொருள் போக்குவரத்தின் பிரதான மார்க்கமாக ரயில்வே சேவை இருப்பதாகவும், அதற்கு ரயில்வே ஊழியர்களும் தொடர்பு என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்தில் ரயில்வே சாரதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் உள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் இன்று(05) நண்பகல் 12 மணிக்கு தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கத்தை கவிழ்க்க நாட்டில் பாரிய சதி – நாமல் ராஜபக்‌ஷ

முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!

உக்ரைன் – போலந்து எல்லைக்கு அருகே 20 இலங்கையர்கள் தஞ்சம்