உலகம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகினார் மற்றுமொரு வேட்பாளர்

(UTV|அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து மைக்கல் ப்ளூம்பர்க் (Michael Bloomberg)விலகியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்பை தோற்கடிப்பதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தாம் போட்டியில் இணைந்துகொண்டதாகவும் அதே காரணத்துக்காக போட்டியில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூயோர்க் நகரின் முன்னாள் மேயரான மைக்கல் ப்ளூம்பர்க் (Michael Bloomberg) பிரசார நடவடிக்கைகளுக்காக 409 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை செலவிட்டதன் பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ரஷ்ய மற்றும் பிரேஸில் தனக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை

முதல் ஊடக சந்திப்பிலேயே ‘கருக்கலைப்பு’ கேள்வி

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை