உலகம்

வெளிநாட்டவர்களுக்கு மறு அறிவித்தல் வரை சவூதி அரேபியா தடை

(UTV|சவூதி அரேபியா) – உலகில் பரவி வரும் உயிர் அச்சுறுத்தல் மிக்க ஆட்கொல்லி கொவிட் -19 எனும் கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டவர்களுக்கு இஸ்லாமியர்களின் புனித மக்கா மற்றும் மதீனாவிற்குள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இனி உள்நாட்டவர்கள் உட்பட அனைவருக்கும் உம்றாஹ் தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மறு அறிவித்தல் வரை மக்காவிற்குள் செல்லும் பாதை மற்றும் மதினா நகர் பள்ளிவாசலுக்குள் செல்லும் பாதைகளும் மூடப்படுவதாக சவூதி அரேபியா சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி, சவூதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு மாத காலம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இதைவிட சிறப்பாக போராட உலகம் தயாராக இருக்க வேண்டும்

கொரில்லாக்களையும் விட்டு வைக்காத கொரோனா

இஸ்ரேல் – ஸமாஸ் மோதல் – அவசர சந்திப்புக்கு ஐ.நா அழைப்பு.