உள்நாடு

மருத்துவ முக கவசங்களுக்கு தட்டுப்பாடு – லலித் ஜயகொடி

(UTV|கொழும்பு) – இலங்கையில் மருத்துவ முக கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைகளில் அமைந்துள்ள மருந்தகங்கள் தற்போது மருத்துவ முககவசங்கள் தொடர்பில் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன

மருத்துவ முகக் கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன, இருப்பினும், சீனாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததன் காரணமாக இந்த இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தகங்கள் கூட்டுத் தாபனத்தின் நிர்வாக இயக்குனர் லலித் ஜயகொடி தெரிவித்துள்ளார்

மேலும் மருத்துவ முக கவசங்களை தயாரிக்கும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் முக்கிய தொழிற்சாலைகள் ஹூபே மாகாணத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

இனி இலக்கத் தகட்டில் மாகாணக் குறியீடுகள் இல்லை !

பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் போட்டியிடும் பிரதமர் ஹரினி

editor

திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் அனைத்தும் இரத்து