வகைப்படுத்தப்படாத

பிரத்யேக சேவை நிலையத்தை காலியில் தொடங்கும் vivo

(UTVNEWS | COLOMBO) –உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான vivo, தனது 2 ஆவது பிரத்யேக சேவை நிலையத்தை இன்று (மார்ச் 2)
காலியில் திறந்து வைத்தது.

இதன் உத்தியோகபூர்வ ரிப்பன் வெட்டும் நிகழ்வில் vivo Mobile Lankaவின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் ஜியாங் மற்றும் அபான்ஸ் பி.எல்.சி அதிகாரிகள் மற்றும் vivo பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

vivo வாடிக்கையாளர்களுக்கு போன் பழுதுபார்ப்பு, ஒன்றுக்கு ஒன்று மாற்றீடு, இலவச மொபைல் சார்ஜிங், மென்பொருள் மேம்படுத்தல், சிம் அட்டை வெட்டுதல் மற்றும் போன்களை அனுப்பும் விரைவு அஞ்சல் சேவை உள்ளிட்ட vivoவின் முதற்தர விற்பனைக்குப் பின்னரான சேவையை அனுபவிக்க பிரத்யேக வாய்ப்பை வழங்குகிறது. உள்நாட்டு மொபைல் சந்தையில் தங்கள் பிரசன்னத்தை
உயர்த்துவதற்கும், நுகர்வோர் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்குமான vivoவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலும், இந்த
சேவை நிலையம் நுகர்வோர் விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளையும் கையாளுகிறது.

புதிய சேவை மையம் குறித்து vivo Mobile Lankaவின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் ஜியாங் கூறுகையில், “2ஆவது பிரத்யேக சேவை நிலையத்தை தொடங்குவது நுகர்வோர் சேவை விரிவாக்கத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

உலகளவில் புகழ்பெற்ற மொபைல் வர்த்தக நாமம் என்ற வகையில், எமது தொலைநோக்கு பார்வையானது எப்போதும் ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக புதுமையான, மிக உயர்தரமான ஸ்மார்ட் சாதனங்களை அறிமுகப்படுத்துவதில் கவனம்  செலுத்துகிறது.

ஒரு பிரத்யேக சேவை மையத்தின் மூலம், நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கி ஒரு படி முன்நோக்கி செல்வதை உறுதிசெய்துள்ளோம் என நாங்கள் நம்புகிறோம், அங்கு சேவை மேன்மையானது சாதனத்தின் தரத்தில் நின்றுவிடாது,
விற்பனைக்கு பிந்தைய சேவைகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது,” என்றார்.

ஜியாங் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் இரண்டு வருட குறுகிய காலத்தில் vivo, எப்போதும் வளர்ச்சியடைந்து வரும் தொழில்துறையினரிடையே தனது பிரசன்னத்தை முத்திரை பதிக்க முடிந்துள்ளது. vivo, இலங்கை சந்தையின் ஆற்றலை
அடையாளங்கண்டதுடன், மேலும் நாட்டின் முக்கிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமங்களுக்கிடையில் எங்கள் நிலையை ஸ்தாபிப்பதற்கான செயன்முறையில் ஈடுபட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டார்.

காலி, Sanwick Plazaவில் அமைந்து 650 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள சேவை நிலையத்துக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள், vivo மொபைல் லங்காவால் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அனுபவமுள்ள மற்றும் அர்ப்பணிப்புள்ள சேவைப் பணியாளர்களிடமிருந்து தமது vivo சாதனங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

vivo மொபைல் லங்கா ஏற்கனவே கொழும்பில் ஒரு பிரத்யேக சேவை மையத்தை நிர்வகித்து வருகின்றது. இது நாடு முழுவதிலுமிருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது. இதுபோன்று, தற்போது காலி சேவை நிலையமானது, தெற்கு பகுதியைச் சேர்ந்த vivo வாடிக்கையாளர்கள் vivoவின் சிறந்த விற்பனைக்குப் பின்னரான சேவைகளை அனுபவிக்க வழிகோலவுள்ளது.
vivo பற்றி vivo உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் என்பதுடன் புதுமையான ஸ்மார்ட் மொபைல்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில்
திடமாகவுள்ளது. vivo உலகளவில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சான்றளிக்கப்பட்டுள்ளது.

vivo உலகளாவிய ரீதியில் 38 இற்கும் மேற்பட்ட சந்தைகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், உலகளவில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட
விற்பனை நிலையங்களில் கிடைக்கப் பெறுகின்றது. வன்பொருள் வடிவம் மற்றும் உற்பத்தி முதல், மென்பொருள் உருவாக்கம் (Android based Funtouch OS) வரை, vivo பூரண மற்றும் நிலைபேறான தொழில்நுட்ப சூழலை கட்டமைத்துள்ளது. தற்போது 20,000 இயக்குனர்கள் Dongguan, Shenzhen, Nanjing, Chongqing ஆகிய நான்கு தலமையகங்களின் கீழ் பணியாற்றுகின்றனர். 3,000 பொறியியலாளர்கள் Beijing, Hangzhou, Shanghai, Nanjing,
Shenzhen, Dongguan, Taipei, Tokyo மற்றும் San Diego (USA) ஆகிய 9 ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலையங்களில் பணியாற்றுகின்றனர்.

இந்நிறுவனம் Dongguan, Chongqing, India, Bangladesh மற்றும் Indonesia ஆகிய ஐந்து உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது.

Related posts

நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் 3வது கப்பல்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

பூட்டான் அரசகுடும்பத்தை சேர்ந்தோர் இலங்கை விஜயம்