(UTV|கொழும்பு) – அமெரிக்காவின் டென்னிஸ் மாநிலத்தின் தலைநகர் நாஷ்விலியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இதுவரை சுமார் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சூறாவளி காரணமாக 40 கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் மீட்பு பணியில் பொலிஸாரும் தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான இடங்களில் வீடுகள் சேதமடைந்ததில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாகவும் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு அவசரகால செயல்பாட்டு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், நாஷ்வில்லே முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.