உள்நாடு

நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு

(UTV|யாழ்ப்பாணம் ) – யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் உள்ள தொடர் அடுக்கு மாடி கட்டிடத்திற்கு முன் இடம்பெற்றுள்ள விபத்தில் 4 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதியில் இருந்து குறித்த கட்டிடத்திற்கு உள்நுழைந்த வேனில் மோதுண்டே குறித்த சிறுவன் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் தெல்லிப்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெதும் கர்னர் அடையாள அணிவகுப்புக்கு..

தீர்வுக்காக சுகாதார அமைச்சரை சந்திக்கும் பதில் நிதியமைச்சர்!

அதிபர்கள் இடமாற்றல் முறைமையில் எழுந்துள்ள சிக்கல்!