உலகம்

லசா காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பலி

(UTV|நைஜீரியா) – நைஜீரியாவில் 2 மாதத்தில் 100-க்கும் மேற்பட்டோர் லசா காய்ச்சலால (Lassa Fever) உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

உலகில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நைஜீரியாவை ‘லசா’ காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. லசா காய்ச்சல் என்பது லாசா வைரசால் ஏற்படும் ஒரு கடுமையான இரத்தக்கசிவு நோயாகும்.

இந்தநிலையில் அங்கு இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் லசா காய்ச்சல் உயிரிழந்துள்ளனர்.

எலிகள் மற்றும் பிற உயிரினங்களிடம் இருந்து தங்கள் வீடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவற்றின் மூலமாகவே இந்த நோய் பரவுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
.

Related posts

நோபாளத்தில் முதலாவது மரணம் பதிவாகியது

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு

சிரியாவில் முதலாவது கொரோனா மரணம்