கிசு கிசு

மொத்தமாக 68 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லை

(UTV|கொழும்பு) – பாராளுமன்றம் இன்று (02) நள்ளிரவுடன் கலைக்கப்படுமானால் 68 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும் எனத் தெரிய வருகின்றது.

5 வருட உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது.

அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் 36 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது.

அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 21 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினருக்கும் இந்த வாய்ப்பு இல்லாமல் போகவுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இன்றைய தினம் வெளியிடப்படு என தெரிவிக்கப்படுகின்றது.

19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்ற ஆயுட்காலம் நான்கரை வருடங்களை கடந்த பின்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

அதன்படி நேற்று(01) நள்ளிரவு பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைந்துள்ள நிலையில் எந்த வேளையிலும் பாராளுமன்றத்தை கலைக்கும் இயலுமை ஜனாதிபதிக்கு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாரிய எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு மீளவும் ஹரின் தயார்

முஸ்லிம் கடைகளில் மலட்டுத் தன்மை கொத்து, உள்ளாடைகள் இப்போது இல்லையா? [VIDEO]

WhatsApp ல் தகவல் அனுப்புவதற்குத் தடை…