உலகம்

கொவிட் -19 : அமெரிக்காவில் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது

(UTV|அமெரிக்கா)- அமெரிக்காவில் கொவிட் -19 தொற்று காரணமாக முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தில் 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் மேலும் பலர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாக கூடிய நிலை காணப்படுவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அதனை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சர்வதேச ரீதியாக 86 ஆயிரத்து 12 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

சீனாவில் 79 ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு தென்கொரியாவில் மூவாயிரத்து 150 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொவிட்-19 தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னையில் 19ஆம் திகதி முதல் மீண்டும் ஊரடங்கு

உலக அளவில் 65 இலட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

உலகிலேயே முதல்முறையாக 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில்