(UTV|கொழும்பு)- டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக வோல்பெக்கியா (Wolbachia) பக்டீரியாவை சுற்றுச்சூழலுக்கு விடுவிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 02 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வோல்பாச்சியா பக்டீரியா 60% பூச்சிகளில் காணப்படுகிறது, ஆனால் பொதுவாக டெங்குவின் முதன்மை காவியான ஈடிஸ் எஜிப்ட் வகை நுளம்புகளில் இவ்வகை பக்டீரியா காணப்படுவது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வோல்பாச்சியா பக்டீரியாவை ஈடிஸ் எஜிப்ட் நுளம்பு முட்டைகளுக்கு செலுத்துவதன் மூலம், நுளம்புகளுக்குள் வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்வதை கடினமாக்கி நுளம்புகள் மூலம் ஒரு நபரிலிருந்து மற்றுமொருவருக்கு வைரஸ்கள் பரவுவதற்கான வாய்ப்புக்களை குறைக்கிறது.