உள்நாடு

மஹாபொல புலமைப்பரிசில் – மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

(UTV|கொழும்பு)- மஹாபொல புலமைப் பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.

தற்போது 11 ஆயிரம் பேர் வரையில் இந்த புலமைப் பரிசில்களை பெற்றுவருகின்றனர். இந்த எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்துவதற்கு விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்த்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்தும் மேம்படுத்தப்படவுள்ளது. ஐந்து வயது முதல் 19 வயதுக்குட்பட்ட சகல பாடசாலை மாணவர்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் பயன்கிடைக்கவுள்ளது. இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்புட்னிக் V தடுப்பூசி பெற்றுக்கொள்ள நடவடிக்கை.

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் நாடு வழமை நிலைக்கு

வற் வரி அதிகரிப்பால் உயரும் எரிவாயுவின் விலை