உலகம்சூடான செய்திகள் 1

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

(UTV|சீனா)- கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முதன்முறையாக மெக்சிகோ, நைஜீரியா, நெதர்லாந்து, லித்துவேனியா, பெலாரஸ், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது 2834 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரானில் 210 பேர் பலியானதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் சர்வதேச ரீதியாக 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2 ஆயிரத்து 800 இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

எனவே, உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Related posts

களு கங்கை நீர் பருகுவதற்கு உகந்தது அல்ல…

ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தடையாகும் கொரோனா

பாயிஸின் வீட்டின் மீது அதிகாலை குண்டுத்தாக்குதல்