உலகம்

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த 1 லட்சம் வாத்துக்கள்

(UTV|கொழும்பு)- லோகஸ்ட் வகை வெட்டுக் கிளிகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக சீனா 1 லட்சம் வாத்துகளை அனுப்பவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு வாத்து ஒரு நாளைக்கு 200 வெட்டுக்கிளிகளை உண்ணும் என்றும், வெட்டுக் கிளிகளை அழிப்பதற்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்தைக் விடவும் இது பயனுள்ள முறை என்றும் சீன வேளாண்மை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் ஒரே நேரத்தில் படையெடுத்து வந்து கிழக்கு ஆப்பிரிக்காவிலும் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இந்தப் பிரச்சனையை குறிப்பான முறையில் எதிர்கொணடு சமாளிப்பதற்கான திட்டங்களை உருவாக்க வல்லுநர் குழு ஒன்றை பாகிஸ்தான் அனுப்புவதாக சீனா அறிவித்தது.

இதேவேளை, கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் பாலைவன லோகஸ்ட் வெட்டுக் கிளிகளை சமாளிக்க சர்வதேச உதவி தேவை என்று ஜனவரியில் ஐக்கிய நாடுகள் கோரிக்கை விடுத்தது.

உணவுப் பயிர்களை விழுங்கும் இந்த வெட்டுக் கிளிகள் ஏற்படுத்தும் வரலாறு காணாத பேரழிவை சமாளிக்க முடியாமல் எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா ஆகிய நாடுகள் போராடிவருகின்றன.

Related posts

அமெரிக்காவில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காசாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேலிய படையினரே பொறுப்பு – பெஞ்சமின் நெட்டன்யாகு.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டாவது நபர்