(UTV|கொழும்பு) – தேசிய பாடசாலைகளுக்காக 153 அதிபர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளுக்காக அதிபர்களை இணைத்துக் கொள்வதற்காக கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இடம்பெற்ற நேர்முகப்பரீட்சைகளுக்கு அமைய பொது சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவை குழுவின் அனுமதியுடன் 153 அதிபர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது 373 தேசிய பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், அதில் 278 பாடசாலைகளுக்கு உரிய தரத்தினை கொண்ட அதிபர்கள் நியமிக்கப்படவில்லை.
தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைய இந்த அதிபர்களுக்கான பாடசாலைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 25 ஆம் திகதி கல்வி அமைச்சில் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ அழகப்பெருமவினால் இதற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.