கேளிக்கை

நடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை – ராதிகா ஆப்தே

(UTV|இந்தியா) – தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகும் துணிச்சலாக கவர்ச்சி வேடங்களில் நடிக்கிறார்.

இவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: ‘நடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை. எப்போது வாய்ப்புகள் இருக்கும், எப்போது இல்லாமல் போகும் என்று தெரியாது. நல்ல படங்கள் அமைந்தால் நடிகையாக இன்னும் கொஞ்ச காலம் எங்களை ஞாபகம் வைத்து இருப்பார்கள். அந்த மாதிரி படங்கள் அமையாவிட்டால் மறந்து விடுவார்கள். நான் சினிமா துறைக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது.

இந்த காலகட்டத்தில் சினிமா, தொடர்கள், சர்வதேச படங்களில் எனது திறமையை வெளிப்படுத்தி நல்ல பெயர் வாங்கி இருக்கிறேன். ஆனாலும் தொழில் ரீதியாக எப்போதும் பயந்து கொண்டேதான் இருக்கிறேன். நாளை எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமா? என்ற சந்தேகத்திலேயே நாட்களை கடத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்

 

Related posts

மறுபடியும் ஆபாச காட்சியில் காஜல்

போட்டோகிராபருடன் ஸ்ரத்தா கபூர் திருமணம்?

அவருக்கு என்னை விட வயது குறைவு-சமந்தா