(UTV|இந்தியா) – சமந்தா தற்போது நயன்தாரா போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் வழங்கும் படங்களில்தான் அதிகம் நடித்து வருகின்றார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் யு-டர்ன், ஓ பேபி ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
தற்போது விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.
இப் படத்தின் மூலம் ரூபாய் 14 கோடி வரை நஷ்டம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவை சமந்தாவிற்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.