உள்நாடு

முன்னறிவித்தலின்றி மின்வெட்டு : ஆய்வறிக்கை கையளிக்கப்படவுள்ளது

(UTV|கொழும்பு) – முன்னறிவித்தல் இன்றி நாடளாவிய ரீதியில் இரண்டரை மணித்தியாலங்கள் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதனை மின்சக்தி அமைச்சரான மஹிந்த அமரவீரவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியையும் செலுத்தக் கோரிக்கை

இன்று முதல் நடைமுறையில் உள்ள போக்குவரத்து வசதி

வடக்கிற்கு கொண்டு செல்லப்படுமா சம்பந்தனின் உடல்