உள்நாடு

இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு)- தற்போது இத்தாலியிலும் கொரோனா வைரஸ் அதிகரித்ததையடுத்து, அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உன்னிப்பாக கண்காணிக்கவும் ஒருங்கிணைக்கவும் ரோம் நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் மிலனில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் மிலனில் உள்ள இலங்கை தூதரகத்தின் கருத்துப் படி, தற்போது எந்த இலங்கையர்களும் வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு கட்சியில் இடமில்லை

தேசிய போர்வீரர் நினைவேந்தல் மாதம் பிரகடனம்

72 தொழிற்சங்கங்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை!