(UTV|சீனா) – உலக வாழ் மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் புதிய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
குறித்த வைரஸ் தொற்றானது வன விலங்குகளிலிருந்து பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள நிலையில் தற்போது சீனாவில் வனவிலங்குகளை விற்பனை செய்வதை முழுமையாக தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உயர்மட்ட குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது