(UTV|கொழும்பு) – அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கு கடன் வசதி வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்க முடியுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
2016 , 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றி அரச பல்கலைக்கழகங்களில் அனுமதிபெறுவதற்கான தகுதியை பெறாத மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
உயர்தரப்பரீட்சையில் 3 பாடங்களிலும் சித்திபெற்ற மாணவர்கள் , உயர்கல்வியமைச்சின் இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களை அனுப்ப முடியும். மார்ச் மாதம் 23ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8 லட்சம் ரூபா வரை கடன் வசதி வழங்கப்படவுள்ளதுடன் 3 தொடக்கம், 4 வருடங்களில் கடனை திருப்பிச்செலுத்துவதற்கான கால அவகாசமும் வழங்கப்படும். இது தொடர்பான மேலதிக விபரங்களை உயர்கல்வியமைச்சின் இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.