(UTV|கொழும்பு) – தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துவதற்கான பாடசாலைகளை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆய்வறிக்கை, கல்வி அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக 124 பாடசலைகள் தேசிய பாடசாலைகளாகப் பெயரிடுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
தேசிய பாடசாலைகள் அற்ற பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே புதிய தேசிய பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எதிர்வரும் சில மாதங்களுக்குள் குறித்த பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிய தேசிய பாடசாலைகளை பெயரிடுவதன் ஊடாக நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 497 ஆக அதிகரிக்கவுள்ளது.