(UTV|கண்டி) – சட்டவிரோமான முறையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர்கள் 12 பேர் இன்று (20) நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவலபிட்டி பகுதியில் மாத்திரம் 500 கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாகவும் இதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விஷேட சோதனை நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.
அதற்கமைய 150 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூலம் மேற்கொண்ட விசேட சுற்றிவலைப்பின் போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
மேலும் இச் சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா, ஹெரோயின், மாவா, கசிப்பு போன்ற போதைப்பொருட்கள் கைபற்றப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 சந்தேக நபர்களும் நாவலபிட்டி பகுதியை சேர்நதவர்கள் எனவும் அவர்களை நாவலபிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.