(UTV|கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 30/1 பிரேரணையில் இருந்து விலக அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பிலான யோசனையை அமைச்சர் தினேஸ் குணவர்தன நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பித்த போதே குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.