(UTV|கொழும்பு) – வருடத்தின் நடுப்பகுதிகளில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதன் காரணமாக பல்வேறு தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.