உள்நாடு

சுயாதீன சங்கம் மத்திய வங்கிக்கு முன்னால் ஆர்பாட்டம்

(UTV|கொழும்பு) – ஈ.டி ஐ வைப்பாளர்களை பாதுகாக்கும் சுயாதீன சங்கம் இன்றைய தினம் மத்திய வங்கிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது.

வைப்பிடலிடப்பட்ட தமது நிதியை விரைவாக பெற்றுத்தருமாறு கோரி அந்த சங்க உறுப்பினர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையதிற்கு அருகில் இருந்து மத்திய வங்கி வரை பேரணியாக வந்த ஈ.டி.ஐ வைப்பாளர்கள் மத்திய வங்கிக்குள் பிரவேசிக்க முற்பட்டதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட இடத்தில் கூடி தமது எதிர்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஈ.டி.ஐ வைப்பாளர்களை பாதுகாக்கும் சுயாதீன சங்கத்தின் உறுப்பினர்கள் 10 பேர் பிரதமர் காரியாலயத்திற்கு கலந்துரையாடலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால் பேருந்து கட்டணம் அதிகரிக்கலாம்

சத்திர சிகிச்சைகள் மற்றும் கிளினிக் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

பிரதான பாதை ரயில் சேவையில் பாதிப்பு