உள்நாடுசூடான செய்திகள் 1

எம்சிசி ஒப்பந்தம்; முதற்கட்டஅறிக்கை ஜனாதிபதியிடம்

(UTVNEWS | COLOMBO) – எம்சிசி ஒப்பந்தம் தொடர்பில் விசாரணைகளின் முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று  ஒப்படைக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் எம்.சி.சி ஒப்பந்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் அது தொடர்பில் ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதனடிப்படையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞானம் பிரிவின் கலாநிதி லலித் குணருவன் தலைமையில் குறித்த குழு உறுப்பினர்களாக வாஸ்து விஞ்ஞான நிபுணர் நாலக்க ஜயவீர, போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் டி.எஸ் ஜயவீர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

Related posts

கஹவ – தெல்வத்த வரையிலான பகுதிக்கு பூட்டு

இதுவரை 29,882 பேர் பூரணமாக குணம்

சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு…