உள்நாடு

லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

(UTVNEWS | RATHNAPURA) – லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹவத்தை பிரதேசத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மரங்களை ஏற்றி சென்ற லொறி மீது சட்ட நடவடிக்கை எடுக்காது அவரிடம் 25,000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related posts

பிரியந்த அபேசூரிய தலைவர் பதவி நீக்கம்

சிறுமி விற்பனை விவகாரம் : வெளிநாட்டு பிரஜையும் சிக்கினார்

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்