உலகம்

கொவிட் – 19 தொற்றுடைய மூன்றாவது நபர் கண்டுபிடிப்பு

(UTV|இந்தியா) – ஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் ஒரு இந்தியருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலை கொரோனா வைரஸ் பீதி காரணமாக கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

அதில் இருந்த 3,700க்கும் மேற்பட்ட பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

அந்த கப்பலில் இதுவரை மொத்தம் 218 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சொகுசு கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர்.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் கப்பலில் பணியாற்றும் மேலும் ஒரு இந்தியருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

இந்திய ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று – 125 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு

தென்கொரியாவில் உரைநிகழ்த்தவுள்ள அனுர

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி