(UTV|கொழும்பு) – டவர் மண்டப கலையரங்கம் மற்றும் எல்பின்ஸ்டென் கலையரங்குகளில் பயிற்சி பெறும் கலைஞர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே இவர் இதனை தெரிவித்துள்ளார்.