(UTV| ஜப்பான்) – ஜப்பான் நாட்டில் கொவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொவிட்-19 வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கொவிட்-19 வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் சீனாவை சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது