(UTV|கொழும்பு) – மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கான முற்தரப்பு ஒப்பந்தம் இன்று(13) கைச்சாத்திடப்படவுள்ளது.
அரசாங்கம், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான ஆறுமுகம் தொண்டமான், ரமேஷ் பத்திரண ஆகியோரும் முதலாளிமார் சம்மேளனத்தினர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கும் யோசனைக்கே கடந்த ஜனவரி மாதம் 13 ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.