உள்நாடு

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான எதுவிதமான யோசனையும் கிடையாது

(UTV|கொழும்பு) – எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி வரை பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான எதுவிதமான யோசனையும் கிடையாது என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், மார்ச் மாதம் இரண்டாம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

நிதி அமைச்சராக ரணில் பதவிப்பிரமாணம் [UPDATE]

வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்

ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது