உள்நாடு

பரீட்சைகள் திணைக்கள நடவடிக்கைகள் இலத்திரனியல் மயமாகிறது

(UTV|கொழும்பு) – இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளை இலத்திரனியல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றுக்கான அனுமதிக்கு இந்த ஆண்டு முதல் இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க முடியும்.

இதற்காக, ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முதல் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும்.

இந்த எண்ணை அடிப்படையாக வைத்தே பரீட்சை முடிவுகள், மத்திய தகவல் மையத்திற்குள் உள்ளடக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்ற முன்னிலையில்

விமான வான் சாகச கண்காட்சி பிரதமரின் தலைமையில் நிறைவு