வணிகம்

நெல் கொள்வனவு வேலைத்திட்டம்

(UTV|கொழும்பு) – பெரும்போக நெல் கொள்வனவுக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் மாவட்ட செயலாளர்களின் கீழ் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உரிய தரத்தைக் கொண்ட நெல் ஒரு கிலோவை 50 ரூபாவுக்கும், 14 சதவீதத்துக்கும் அதிகமான 22 சதவீதத்துக்கும் குறைந்த ஈரத்தன்மை கொண்ட ஒரு கிலோ நெல்லை 44 ரூபாவிற்கும் விவசாயிகளிடம் கொள்வனவு செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் ஒருவரை ஜனாதிபதி நியமித்திருப்பதாவும் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

சீமெந்தின் விலையும் அதிகரிப்பு

முட்டைக்கான மொத்த விலை அதிகரிப்பு

பிரபல முதலீட்டாளர் மாக் மோபியஸ் இலங்கை வருகை