(UTV|கொழும்பு) -சுவிஸர்லாந்து தூதரக அதிகாரியான கானியா பெனிஸ்டர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் ஷானி அபேசேக்கர மற்றும் ஊடகவியலாளர் அனுரங்கி பிரியங்வதா ஆகியோரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக, நீதிமன்றிடம் குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தூதரக அதிகாரியின் கணவர், மற்றுமொரு பெண்ணினுடைய தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதம நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.