(UTV|சீனா) – கொரோனா வைரஸ் பரவலைக் கையாண்ட விதம் தொடர்பில் சிரேஷ்ட அதிகாரிகள் பலரை சீன அரசாங்கம் பதவி நீக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ள நிலையில், சீனா இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
ஹூபேய் சுகாதார ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் குறித்த ஆணைக்குழுவிற்கான கட்சியின் செயலாளர் ஆகியோரும் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரினதும் பதவி வெற்றிடத்திற்கு, தேசிய பிரமுகர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளரும் பதவியிருந்து அகற்றப்பட்டுள்ளார்.
நன்கொடைகளைக் கையாள்வதில், தமது கடமைகளை உதாசீனம் செய்தமைக்காக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை உலுக்கிவரும் கொரானா வைரஸினால், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் அந் நாடு பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
இந்தநிலையிலேயே பல்வேறு எதிர்பாராத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.