(UTV|கொழும்பு) – பதுளை, மொனராகலை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜானக ஹந்துன் பத்திராஜ தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு எவரேனும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜானக ஹந்துன் பத்திராஜ தெரிவித்துள்ளார்.