(UTVNEWS | INDIA) –பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இந்திய பயணத்தின் நான்காவது மற்றும் இறுதி நாள் இன்றாகும்.
இந்த விஜயத்தின் போது வரணாசி, புத்தகாய, சாராநாத் ஆகிய இடங்களை தரிசித்த பிரதமர் இன்று காலை திருப்பதிக்குச் செல்லவுள்ளார்.
பிரதமர் பதவியை ஏற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்பது சுட்டிக்காட்டதக்கது.
குறித்த விஜயத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவின், வெளிவிவகார அமைச்சர் வைத்தியர் சுப்பிரமணியன் ஜெய்சங்கர் மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை பிரதமர் இந்திய பயணத்தில் சந்தித்திருந்தார்.
இதில் இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல், வர்த்தகம், வளர்ச்சி, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளில் கவனம் செலுத்தியதாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இரு நாடுகளின் மீன்பிடி சமூகங்களுக்கிடையில் நடந்து வரும் மோதல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.