(UTV|தென்னாபிரிக்கா) – தென்னாபிரிக்காவில் இடம்பெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐ.சி.சி) நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி குறித்த மோதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் 5 வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை தடை விதித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றவுடன் அந்த அணி வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்து வெற்றியை கொண்டாடினர்.
அப்போது எதிர்பாராத விதமாக பங்களாதேஷ் வீரர் ஒருவர் இந்திய வீரர்கள் மீது தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார் குறித்த வீரரை நோக்கி சீற்றத்துடன் பாய்ந்த இந்திய வீரர் ஒருவர் அவரை நிலத்தில் வீழ்த்தினார் இரு அணியினர் இடையே ஏற்பட்ட இம் மோதலை நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஓடி வந்து வீரர்களை சமாதானப்படுத்தினர்.
மேலும் பங்களாதேஷின் அணியின் தலைவர் தங்களது அணியின் இந்த நடவடிக்கையை எண்ணி வேதனைப்படுவதாக தெரிவித்துள்ளார்
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நடுவர்கள் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு முறைப்பாடு ஒன்றை அளித்தனர்.
இதனை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட சர்வதேச கிரிக்கட் பேரவையானது பங்களாதேஷ் அணியின் 3 வீரர்கள் மற்றும் இந்திய அணியின் 2 வீரர்களுக்கு எதிராக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
Shameful end to a wonderful game of cricket. #U19CWCFinal pic.twitter.com/b9fQcmpqbJ
— Sameer Allana (@HitmanCricket) February 9, 2020