உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பாக விமல் கருத்து

(UTVNEWS | COLOMBO) –எதிர்வரும் மார்ச் மாதம் 3 திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில்  ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் பேச்சு வார்த்தை நடைபெறுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கு கருத்து தெரிவித்த அவர், மார்ச் மாதம் 3ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால், ஓய்வூதியத்தை எதிர்பார்க்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது என்று அமைச்சர் கூறினார்.

மார்ச் மாதம் 3ஆம் திகதிக்கு பிறகு ஜனாதிபதி விரும்பும் எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு என்று அவர் கூறினார்.

பாராளுமன்றம் மார்ச் மாதம் 3ஆம் திகதிக்கு பிறகு கலைக்கப்பட்டால், எதிர்வரும் ஏப்ரல் 26திகதி வாக்களிக்கும் தினமாக இருக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

Related posts

கம்பஹா உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 18 மணித்தியால நீர் விநியோகத்தடை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தேர்தல் இன்று

நாட்டின் பொருளாதாரத்தினை பின்னடைய செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்