(UTV|கொழும்பு) – வருடாந்த இடமாற்றங்களுக்கு அமைய மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறையை சார்ந்த 34 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் காணப்படும் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க குறித்து விசாரித்து அவர் தொடர்பின் தீர்ப்பை வழங்கியுள்ள நுகேகொட நீதவான் நீதிமன்ற நீதிபதி வசந்த குமாரவும் இந்த இடமாற்றத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய நீதிபதி மொஹமட் மீஹால் நுகேகொட நீதவான் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இடமாற்றங்கள் தொடர்பில் இதுவரை 12 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் இரண்டு மேன்முறையீடுகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கபட்டுள்ளன.