விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது பங்களாதேஷ்

(UTV|தென்னாபிரிக்கா)- இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக முன்னேறிய பங்களாதேஷ், இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது.

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் 3 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியே உலக்கிண்ணத்தை பங்களாதேஷ் இளையோர் அணி சுவீகரித்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி 47.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுதது, 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் இளையோர் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் போட்டி மழையால் பாதிக்கபட்டது.

இதனைத் தொடர்ந்து டக்வர்த் லூயிஸ் முறையில் அவ்வணிக்கு 46 ஓவர்களில் 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் இளையோர் அணி 46.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Related posts

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

அணியில் மீள இணைக்கப்பட்டுள்ள வோனர் மற்றும் ஸ்மித்

டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து