(UTV|கொழும்பு) – ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர் மொஹமட் ஹூமாயொன் க்வயம் இன்று(09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து சந்தித்திருந்தார்.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் சிறப்பு ஆலோகராக உள்ள இவர், குறித்த சந்திப்பின் போது இருதரப்பு மற்றும் பிராந்திய உறவுகளின் வளர்ச்சி குறித்து ஜனாதிபதியுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.