உள்நாடு

தியத்தலாவ முகாமிலுள்ள மாணவர்கள் ஆரோக்கிய நிலையில் – இராணுவ ஊடகப் பேச்சாளர்

(UTV|கொழும்பு) – சீனாவின் வூஹானிலிருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு தியத்தலாவை இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மாணவர்கள், சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் பலத்த கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாளாந்தம் மூன்று தடவைகள் உடல் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சீனாவின் வூஹானில் தங்கியிருந்த இலங்கை மாணவர்கள் 33 பேர், கடந்த முதலாம் திகதி மத்தள விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், இரண்டு வார காலத்துக்கு கண்காணிப்பில் வைத்துக் கொள்வதற்காக, குறித்த மாணவர்கள் தியத்தலாவை இராணுவ முகாமிற்கு அழைத்து வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்

இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பஹ்ரைன் தடை

பெதும் கர்னர் அடையாள அணிவகுப்புக்கு..