உள்நாடுசூடான செய்திகள் 1

விண்ணப்ப முடிவுத் திகதியில் மாற்றம்

(UTV|கொழும்பு) – தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 20ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று(08) வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள முதலாவது பட்டப்படிப்பொன்றை அல்லது அதற்கு சமமான தகைமையாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள டிப்ளோமா பாடநெறி ஒன்றினை 2019.12.31ஆம் திகதி முழுமைப்படுத்தியிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 14ம் திகதி என முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கைது

இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

ஒரு உளுந்து வடை மற்றும் ஒரு கப் தேனீர்க்கு 1000/- ரூபா