உள்நாடு

பல்கலைக்கழக பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை : பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

(UTV|கொழும்பு) – பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைத் தெடர்வது வழமையான செயற்பாடாக இருந்து வருகின்றது.

இதற்கு அமைவாக அண்மைக் காலமாக பகிடிவதை தொடர்பான பல குற்றச்சாட்டுக்களும், சம்பவங்களும் நடைபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

எனினும் இன்றுவரை பல்கலைகழக மாணவர்கள் பகிடிவதை தொடர்பாக பல அசௌகரியங்களை சந்திப்பதும், கல்வி தொடர்பாக பல இழப்புக்களை சந்திப்பதும் இவர்கள் வழமையாக எதிர்கொள்ளும் சவால்களாக மாறிவருகின்றது.

அண்மையில் யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவியிடம் தொலைபேசி மூலம் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதாக மாணவியின் பெற்றோர் வடமாகாண ஆளுனரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பகிடிவதை மேற்கொண்டவர்களுக்கு எதிராகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் முகமாகவும் வட மாகாண ஆளுநரின் விசேட கவனத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக இன்று (7) பல்கலைக்கழக அதிகாரிகள் மேற்படி சம்பவத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது பற்றி கலந்துரையாடவுள்ளனர்.

Related posts

அலரி மாளிகை வளாகத்திற்குள் நுழைந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது.

மிகைக்கட்டண வரி சட்டமூலம் நிறைவேற்றம்

இலங்கையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் இந்திய கல்லூரி!