உள்நாடு

வேலைவாய்ப்பு அற்ற 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

(UTVNEWS | COLOMBO) -வேலைவாய்ப்பு அற்ற 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்பை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த வேலைத்திட்டத்திற்கான அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அமைச்சரவைக்கு நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய 2012 முதல் 2019 வரை பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு, உள்வாரி மற்றும் வெளிவாரி என்ற பேதமின்றி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

பாடசாலை ஆசிரியர்கள், நீர்ப்பாசனம், விவசாய அபிவிருத்தி, கணக்கெடுப்புத் துறை மற்றும் அமைச்சகங்களின் உள்ள வெற்றிடங்களில் மார்ச் முதலாம் திகதி முதல் ஆட்சேர்ப்பு செய்யப்படும் என்றும் அவர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அவர்கள் ஐந்து வருடம் அந்த துறைகளில் கட்டாயமாக பணியாற்ற வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டி விலையில் மாற்றம்

பாராளுமன்றத் தேர்தலை பிற்போட ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை – எதிர்க்கட்சி எச்சரிக்கை.

தேர்தலை நடத்துங்கள் – பொதுஜன பெரமுன வலியுறுத்தல்.