(UTV|ஹொங்கொங்) – கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து செல்கின்ற நிலையில், ஹொங்கொங்கின் கேத்தே பசிபிக் விமான நிறுவனம் 27 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப தீர்மானித்துள்ளது.
தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட இழப்பில் இருந்து அண்மையில் மீண்டு வந்த ஹொங்கொங்கின் கேத்தே பசிபிக் விமான நிறுவனம் கொரோனா வைரசால் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக தமது நிறுவனத்தில் பணியாற்றும் 27 ஆயிரம் ஊழியர்களையும் ஊதியம் இல்லா விடுப்பு எடுத்துக்கொள்ள அதன் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து புறப்படும் மற்றும் சீனாவுக்கு செல்லும் விமானங்களை பெரும்பாலான நாடுகள் இரத்து செய்து விட்டதால் விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.